பிளாக் பால் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா

உலக மகளிர் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் உலகின் 5-ஆம்
வெற்றி மகிழ்ச்சியில் ஜோஷ்னா; தோல்வி விரக்தியில் சாரா
வெற்றி மகிழ்ச்சியில் ஜோஷ்னா; தோல்வி விரக்தியில் சாரா


உலக மகளிர் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான நியூஸிலாந்தின் ஜோயல் கிங்கை சந்திக்கிறார். 
எகிப்தில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில் உலகின் 16-ஆம் நிலையில் உள்ள ஜோஷ்னாவும், 6-ஆம் நிலையில் உள்ள இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரியும் மோதினர். 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஷ்னா 11-4, 6-11, 14-12, 11-9 என்ற செட்களில் வெற்றி பெற்றார். இது, கடந்த 7 ஆண்டுகளில் சாராவுக்கு எதிராக ஜோஷ்னா பதிவு செய்யும் முதல் வெற்றியாகும். முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை ஓபன் போட்டியின்போது சாராவை ஜோஷ்னா தோற்கடித்திருந்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் கேமில் ஜோஷ்னா ஆக்ரோஷம் காட்டினார். அடுத்த செட்டில் சாரா மீண்டு வந்தார். எனினும் அடுத்தடுத்த கேம்களில் ஜோஷ்னா தனது ஆதிக்கத்தை செலுத்தி ஆட்டத்தை தன் வசமாக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com