சுடச்சுட

  

  உள்ளூரில் இந்தியாவை வீழ்த்தியது பெரிய வெற்றியாகும்: உஸ்மான் காஜா

  By DIN  |   Published on : 15th March 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Usman-khawaja

  உள்ளூரில் இந்தியாவை வீழ்த்தியது மிகப்பெரிய வெற்றியாகும் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் காஜா கூறியுள்ளார்.
  5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் கவாஜா 50, 38, 104, 91, 100 என அற்புதமாக ரன்களை குவித்து, தங்கள் அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக விளங்கி தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
  இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
  பலமான இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மிகப்பெரியவெற்றியாகும். அவர்கள் எங்கள் நாட்டில் வென்று வந்தனர். தொடரில் 2 தோல்விகளை பெற்றாலும், அடுத்தடுத்து நாங்கள் 3 வெற்றிகளை குவித்தோம். நாங்கள் தற்போதைய சூழலில் சிறப்பாக ஆடி வருகிறோம். இந்த வெற்றியை கொண்டாட இதுவே தருணம். உலகக் கோப்பை போட்டிக்கு நீண்ட காலம் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்து 5 ஆட்டங்கள் தொடர் உள்ளது. 
  இந்த தொடர் வெற்றியால் உலகக் கோப்பையை வெல்வீர்களா எனக் கேட்டபோது, கவாஜா கூறியதாவது: இதுகுறித்து உறுதியாக கூற முடியாது. உலகக் கோப்பை தொடங்க நீண்ட காலம் உள்ளது. நீண்டகாலம் தொடர்ந்து ஆடினால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவோம். பாக்.தொடரில் ஸ்மித், வார்னர் இடம்பெற வாய்ப்பில்லை. எனினும் பின்னர் அவர்கள் இணையலாம்.
  அணியில் இடம்பெறுவதற்கு உள்ள போட்டி தொடர்பாக எந்த வீரரும் தற்போது நினைக்கவில்லை. வெற்றி பெறாவிட்டால் சோகம் தான் உண்டாகும். இந்த வெற்றிகளை நான் கொண்டாடிவருகிறேன். எந்த ஆஸி. வீரருக்கும் கிரிக்கெட் ஆட இந்தியா கடினமான இடமாகும் என்றார் காஜா.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai