சுடச்சுட

  
  lakshaya-sen-badminton


  சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயாசென்  ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
  லிங்ஷூய் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் லக்ஷயா 21-14, 21-15 என்ற கேம் கணக்கில் தென் கொரியாவின் யுங் உங்கை வென்றார். காலியிறுதியில் அவர் சீனாவின் ஸþ ùஸகியை எதிர்கொள்கிறார்.
  ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சுபாங்கர் டே அற்புதமாக ஆடி 12-21, 22-20, 21-17 என்ற கேம் கணக்கில் ஆசிய நடப்பு சாம்பியன் ஜோனத்தான கிறிஸ்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
  கலப்பு இரட்டையர் பிரிவில் அர்ஜுன்-மணிஷா இணை 21-16, 16-21, 21-15 என சக இணையான பிரணவ் ஜெர்ரி-சிக்கி ரெட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai