மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: வங்கதேசம் - நியூஸிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ரத்து!

வங்கதேச அணி தற்போது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது... 
மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: வங்கதேசம் - நியூஸிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ரத்து!

நியூஸிலாந்தில் உள்ள இரு மசூதிகளில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதையடுத்து வங்கதேச அணியின் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேச அணி தற்போது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 என வென்றது. மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு டெஸ்டுகளின் முடிவில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி. மூன்றாவது டெஸ்ட் நாளை கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள இரு மசூதிகளில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. தொழுகையில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்த மசூதியில் தொழுகை செய்வதற்காகப் பேருந்தில் வந்துகொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சம்பவம் கேள்விப்பட்டு உடனடியாக தங்களுடைய ஹோட்டலுக்குத் திரும்பினார்கள்.

முதலில் பேருந்தில் பாதுகாப்பாக இருந்த வீரர்கள் பிறகு அவசர அவசரமாக அருகில் இருந்த டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவதாக இருந்த மைதானத்துக்குள் சென்றார்கள். நிலைமை சீரான பிறகு அவர்கள் தங்களுடைய ஹோட்டலுக்குத் திரும்பினார்கள். இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் ரத்து செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com