சுடச்சுட

  

  உலகக் கோப்பையில் இந்தியாவின் 4-ம் நிலை வீரர் இவர் தான்: கங்குலியின் தேர்வைக் கண்டு அதிர்ச்சியடைய வேண்டாம்!

  By எழில்  |   Published on : 15th March 2019 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kohli_march1

   

  2019 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கப் போவது யார்?

  ராயுடு? விஹய் சங்கர்? தோனி? ரிஷப் பந்த்? கேஎல் ராகுல்?

  இப்படியொரு குழப்பம் நிலவும்போது இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி முற்றிலும் புதிதான ஆலோசனை ஒன்றைக் கூறியுள்ளார். அவர் கூறுவதைப் படித்துப் பாருங்கள்:

  நான் சொல்வதைச் சிலரால் நம்பமுடியாது, பலர் என்னுடைய ஆலோசனையைக் கேட்டுச் சிரிக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 4-ம் நிலை வீரர், புஜாரா தான். அவருடைய ஃபீல்டிங் பலவீனமாக இருக்கலாம். ஆனால் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். என்னுடைய முடிவைக் கேட்டு பலர் அதிர்ச்சியடையலாம். சமீபகாலமாக இந்தியா முயற்சி செய்த வீரர்களை விடவும் சிறந்ததாக வேண்டுமென்றால் அவர் புஜாரா தான். அவரே சிறந்த தேர்வாக இருப்பார். 

  ஆரம்பக்கட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் பங்களித்ததுபோல புஜாராவினாலும் இந்திய அணிக்குப் பங்களிக்க முடியும். இது என்னுடைய முடிவு. பலர் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெரியும். சிலநேரங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் நிலைத்தன்மை தேவைப்படும். அதை புஜாராவால் வழங்கமுடியும். அதிலும் உங்களுடைய முதல் மூன்று பேட்ஸ்மேன்களால் எக்கச்சக்க ரன்களை வழங்க முடிகிறபோது புஜாராவைத் தேர்வு செய்யலாம் என்று கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

  இதுவரை 68 டெஸ்டுகளில் விளையாடியுள்ள புஜாரா, இந்தியாவுக்காக 5 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக 2014-ல் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai