Enable Javscript for better performance
இந்தியன்வெல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் கெர்பர், பெலிண்டா- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன்வெல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் கெர்பர், பெலிண்டா

    By DIN  |   Published on : 16th March 2019 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kerber-1


    இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் அரையிறுதிக்கு ஏஞ்சலிக் கெர்பர், பெலிண்டா பென்கிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
    வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸை 7-6 6-3 என்ற நேர் செட்களில் வென்றார் ஜெர்மனியின் கெர்பர். 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் கெர்பர் இங்கு முதல் பட்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.
    மற்றொரு காலிறுதியில் பெலிண்டா 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார். அரையிறுதியில் கெர்பர்-பெலிண்டா மோதுகின்றனர். 
    ஆடவர் பிரிவில் உலகின் 7-ஆம் நிலை வீரர் டொமினிக் தீம் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவருக்கு எதிராக ஆடவிருந்த கெயின் மொன்பில்ஸ், காயம் காரணமாக விலகினார். அரையிறுதியில் ரனோயிக்கை எதிர்கொள்கிறார் தீம்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai