சுடச்சுட

  

   கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு: உயிர் தப்பினர் வங்கதேச  கிரிக்கெட் வீரர்கள் 

  By DIN  |   Published on : 16th March 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bangla-cricket-team


  3-ஆவது டெஸ்ட் ரத்து
  கிறைஸ்ட்சர்ச்சில் மசூதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சுட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியினர் உயர் தப்பினர். இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
  வங்கதேச கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவலில் சனிக்கிழமை மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் தொடங்க இருந்தது. இதற்கிடையே அந்நகரின் மையப் பகுதியில் உள்ள அல்நூர் மசூதியில் வழிபடுவதற்காக வங்கதேச அணி வீரர்கள் வாகனத்தில் சென்றிருந்தனர்.
  அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதற்கிடையே வங்கதேச வீரர்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநர் பாதுகாப்பாக அவர்களை ஹோட்டலுக்கே அழைத்துச் சென்று விட்டதால் உயிர் தப்பினர்.
  உயிர் தப்பினாலும், இச்சம்பவத்தால் தாங்கள் அச்சமுற்றுள்ளதாக அணி வீரர்கள் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹ்மான் சுட்டுரையில் கூறியுள்ளனர். கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலில் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இது ஒரு கருப்பு நாள் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.
  இதற்கிடையே நியூஸி.--வங்கதேசம் இடையே நடைபெறவிருந்த 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் கைவிடப்படுவதாக இரு நாட்டு வாரியங்களும் அறிவித்துள்ளன.

  ஐசிசி இரங்கல்
  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) வெளியிட்ட அறிவிப்பில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இது மிகவும் அதிர்ச்சி தரும் சம்பவம் இரு நாட்டு வீரர்கள், அதிகாரிகள் பாதுகாப்பு உள்ளனர். டெஸ்ட் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதை ஆதரிக்கிறோம் என சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் கூறியுள்ளார். 

  முனிக் முதல் கிறைஸ்ட்சர்ச் வரை பயங்கரவாத சம்பவங்கள்

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai