சுடச்சுட

  

  மினர்வா பஞ்சாப் அணி கலந்து கொள்ளாததால், புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த ஹீரோ சூப்பர் கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. ஏஐஎப்எப் பாரபட்சமான முறையில் தங்களை நடத்துவதாகக் கூறி, ஐ லீகைச் சேர்ந்த 8 அணிகள் சூப்பர் கோப்பை போட்டிகளை புறக்கணித்துள்ளன.


  இந்தியாவின் குல்தீப் யாதவ், ஆப்கன் ரஷீத் கான், பாகிஸ்தான் யாஸிர் ஷா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள், எந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச அஞ்சுவதில்லை என ஜாம்பவான் ஷேன் வார்னே பாராட்டியுள்ளார். விரல்களால் பந்துவீசுபவர்களைக் காட்டிலும், மணிக்கட்டை பயன்படுத்தி வீசுபவர்களுக்கு கூடுதலாக சில சாதகங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.


  மும்பை சீனியர் தேர்வாளர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். அஜித் அகர்கல் தலைமையிலான குழுவைச் சேர்ந்த நிலேஷ் குல்கர்னி, சுனில் மோரே, ரவி தாக்கர் உள்ளிட்டோர் பதவி விலகியவர்களில் அடங்குவர். மும்பை கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தேர்வாளர் குழுவினர் விலகியதாகக் கூறப்படுகிறது.


  ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தொடக்க நாளான வெள்ளிக்கிழமை 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது.


  பாட்டியாலாவில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன் போட்டியில் தகுதி அளவை எட்டி, வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத்கெளர், ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் ஆகியோர் ஆசிய சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


  புது தில்லியில் வரும் 26-ஆம் தேதி தொடங்கவுள்ள யோனெக்ஸ் சன்ரைஸ் இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சீனாவின் சென் யூபெய், ஷி யுகி மற்றும் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், பிரணாய், காஷ்யப், சுபாங்கர் டே, விக்டர் ஆக்ùஸலசன் உள்பட முனனணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.


  2022 பிஃபா உலகக் கோப்பையில் அணிகள் எண்ணிக்கையை 32-இல் இருந்து 48 ஆக உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு ஜூன் மாதம் கூடவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அதன் தலைவர் இன்பேன்டினோ தெரிவித்துள்ளார். 


  ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ப்ரீமியர் லீக் அணிகளான செல்ஸி, ஆர்செனல் உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai