தோனி தான் என்னை காப்பாற்றினார்: இஷாந்த் சர்மா

அணியில் இருந்து என்னை நீக்கிய போதெல்லாம் தோனி தான் என்னை காப்பாற்றினார் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். 
தோனி தான் என்னை காப்பாற்றினார்: இஷாந்த் சர்மா


அணியில் இருந்து என்னை நீக்கிய போதெல்லாம் தோனி தான் என்னை காப்பாற்றினார் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது, 

"என்னை அணியில் இருந்து நீக்கும் தருணத்தில் எல்லாம் தோனி தான் காப்பாற்றினார். அவர் எனக்கு நிறைய ஆதரவளித்திருக்கிறார். 

தற்போது நான் அணியில் மூத்த வீரர். விராட் என்னிடம் வந்து " நீ சோர்வாக இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். எனினும் அணியின் மூத்த வீரர் என்பதால் அணிக்காக நீ செய்து தான் ஆக வேண்டும்" என்பார். 

முன்னதாக, நான் நன்றாக பந்துவீச மட்டுமே நினைப்பேன். தற்போது நன்றாக செயல்பட்டு விக்கெட்டுகள் வீழ்த்த நினைக்கிறேன். விக்கெட்டுகள் தான் ஒருவர் மீதான எண்ணத்தை மாற்றும். கிரிக்கெட்டில், வீரருக்கு ஒருவர் மீது எழும் எண்ணம் மிக முக்கியமானது. ஒரு வீரர் மீது தோன்றும் எண்ணம் எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. 

நான் பொதுவாக நிறைய விஷயங்களை குறித்து சிந்திக்க மாட்டேன். அனைத்தையும் வாய்ப்பாக எடுத்துக்கொள்வேன். நான் நன்றாக செயல்பட்டால் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதற்கான நிலையில் இருப்பேன். 

நான் எந்த இடத்தில் பின்தங்கியிருக்கிறேன் என்பது குறித்து யாரிடமும் பேசவில்லை. என் மீது நானே கடுமையாக இருப்பது தான் எனது சுபாவம். நான் தேர்வாகவில்லை என்றால், அதற்கான விமரிசனம் என்னிடம் தான் உள்ளது. மற்றவர்களை காரணம் கூற மாட்டேன்.  

கவுண்டி கிரிக்கெட் எனக்கு நிறைய உதவியது. 16 நாட்களில் 4 போட்டிகளில் 300 ஓவர்களை வீசினேன். பந்துவீச்சில் அது என்னுள் நிறைய கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது. 

ஜேசன் கில்லெஸ்பி எனக்கு நிறைய நம்பிக்கையளிப்பார். அவர் எப்போதும் எனக்கு உதவியாகவே இருப்பார். எனக்கான சுதந்திரத்தை அளிப்பார். அங்கு நான் 2 மாதங்கள் தான் இருந்தேன். அதனால், போதிய நுட்பமான மாற்றங்கள் ஏதும் என்னிடம் ஏற்படவில்லை.  

டியூக்ஸ் பந்து பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். கூக்கபுரா பந்துகள் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதளவில் உதவாது. டெஸ்ட் கிரிக்கெட் சற்று தரம் குறைந்ததற்கான காரணம் இது தான். எப்போதும் பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்தி வந்தால், அது உதவாது. கூக்கபுரா பந்தில் மாற்றங்களை புரிய முடியாது. ஆனால், டியூக்ஸ் பந்தில் அதை செய்ய முடியும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com