ஐஎஸ்எல் 2019: புதிய சாம்பியன் யார்?: இறுதிச் சுற்றில் நாளை பெங்களூரு-கோவா அணிகள் மோதல்

இந்திய கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2019) புதிய சாம்பியன் ஆகப் போகும் அணி எது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐஎஸ்எல் 2019: புதிய சாம்பியன் யார்?: இறுதிச் சுற்றில் நாளை பெங்களூரு-கோவா அணிகள் மோதல்



இந்திய கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2019) புதிய சாம்பியன் ஆகப் போகும் அணி எது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிரிக்கெட் ஆட்டத்துக்கு இந்தியா முழுவதும் பெருத்த வரவேற்பு உள்ள நிலையில், தேசிய விளையாட்டான ஹாக்கி, கால்பந்து போன்றவற்றுக்கு நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளிலேயே அதிக ஆதரவு உள்ளது. குறிப்பாக மேற்குவங்கம், கேரளா, கோவா, மகாராஷ்டிரம், பஞ்சாப், உள்பட சில இடங்களில் தான் கால்பந்து ஆட்டத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது.
ஆனால் உலகம் முழுவதும் அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டில் கால்பந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கால்பந்தை மேம்படுத்த ஏஐஎப்எப் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே ஐ லீக் என்ற பெயரில் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் இந்திய கால்பந்து சூப்பர் லீக் போட்டி  2103-ல்அறிமுகம் செய்யப்பட்டது. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அணிகளை ஏலத்தில் எடுத்தனர். அதே போல் உள்ளூர் மற்றும் அயல்நாடுகளில் இருந்து வீரர்களும் ஏலத்தின் மூலம் அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
10 அணிகள் 
முதல் லீக் போட்டி 2014-இல் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் அதலெட்டிகோ டி கொல்கத்தா 1-0 என கேரள பிளாஸ்டர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டம் வென்றது. 2015 சீசனில் சென்னையின் அணி 3-2 என கோவாவை வென்று பட்டம் வென்றது. அதன் தொடர்ச்சியாக 2016-இல் மீண்டும் கொல்கத்தா அணி 4-3 என பெனால்டி முறையில் கேரளத்தை வென்றது. 2017-இல் சென்னையின் அணி 3-2 என பெங்களூரு அணியை வென்று சாம்பியன் ஆனது. கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. 
சென்னையின் அணி அதிர்ச்சி
நடப்பு சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி படுதோல்வியுடன் 10-ஆம் இடத்துக்கு தளளப்பட்டது. குறிப்பாக 18 ஆட்டங்களில் 2-இல் மட்டுமே வென்று, 13 தோல்வி, 2 டிராவுடன் 9 புள்ளிகளை மட்டுமே அந்த அணியால் பெறமுடிந்தது குறிப்பிடத்தக்கது.
2019-இல் புதிய சாம்பியனுக்கு வாய்ப்பு
இந்த ஐஎஸ்எல் போட்டி இறுதிச் சுற்று வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. மும்பை சிட்டி அணிக்கு எதிராக அரையிறுதியில் 5-2 என்ற கோல் சராசரி அடிப்படையில் கோவா எஃப்சி அணி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் நார்த் ஈஸ்ட் அணியிடம் 2-1 என தோல்வியுற்ற போதிலும், பெங்களூரு அணி, இரண்டாம் கட்டத்தில் அபாரமாக ஆடி வென்று இறுதிக்குள் நுழைந்தது. இக்கட்டத்தில் இரு அணிகள் தான் தலைசிறந்த அணிகளாக திகழ்கின்றன. தற்போதைய 2019 (5-ஆவது சீசனில்) புதிய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் நிலை உருவாகி உள்ளது. 
பரபரப்பை உருவாக்கியுள்ள ஆட்டம்
பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிச் சுற்றில் ஆடும் நிலையில் பட்டத்தை முதன்முறையாக வெல்ல போராடும் என்பதால் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த சீசனில் பெங்களூரு அணி 18 ஆட்டங்களில் 10-இல் வென்று, 4 தோல்வி, 4 டிரா கண்டு 34 புள்ளிகளைப் பெற்றது.
கோவா அணியும் அதே போல் 10 வெற்றிகளுடன் 34 புள்ளிகளைப் பெற்றது. அரையிறுதியில் தோல்வி கண்ட மும்பை சிட்டி 30 புள்ளிகளையும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் 29 புள்ளிகளையும் பெற்றன.
கோவா அணி இறுதிக்குள் நுழையும் முன்பு பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தொடக்கம் முதலே அரையிறுதி வரை 42 கோல்களை அடித்துள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு அணியும் மொத்தம் 35 கோல்களை எதிரணியின் மீது போட்டுள்ளது. 
தாக்குதல் பாணி
கோவா-பெங்களூரு உள்ளிட்ட இரு அணிகளுமே மைதானத்தில் தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடிப்பவையாகும். மற்ற ஐஎஸ்எல் அணிகள் அனைத்தும் பதில் தாக்குதல் மற்றும் தற்காப்பு பாணியை பின்பற்றி ஆடுபவை ஆகும். பெங்களூரு அணி தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளது. அதே நேரத்தில் கோவா நுழைவது இதுவே முதன்முறையாகும்.
மும்பையில் இறுதி ஆட்டம்
கடைசியாக இரு அணிகளும் மோதிய 4 ஆட்டங்களில் பெங்களூரு 3 முறையும், கோவா அணி 1 முறையும் வென்றுள்ளன. இதற்கிடையே ஐஎஸ்எல் 2019 இறுதிக் கட்டமாக இரு அணிகளுக்கும் நடுநிலையான மும்பையில் வரும் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. 
பெங்களூரு அணியில் நட்சத்திர வீரர்கள் கேப்டன் சுனில் சேத்ரி, மிகு, பெகே, ஹெர்ண்ôன்டஸ், உதாந்தா சிங், உள்ளிட்டோரும், கோவா அணியில் கோரோமினாஸ், பெடியா, ஜாக்கிசந்த் சிங், பிராண்டன் பெர்ணாண்டஸ், ஜஹோ ஆகியோரும் உள்ளனர்.
முதல் முறையாக சாம்பியன் ஆகப் போவது பெங்களூரா அல்லது கோவா அணியா என்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com