சுடச்சுட

  

  இந்தியன்வெல்ஸ் ஏடிபி: அரையிறுதியில் ஜாம்பவான்கள் நடால்-பெடரர்

  By DIN  |   Published on : 17th March 2019 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tennis

  இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றில் ஜாம்பவான்கள் ரபேல் நடால்-ரோஜர் பெடரர் ஆகியோர் மோதுகின்றனர்.
   வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரர் நடால் 7-6,7-6 என்ற நேர் செட்களில் ரஷியாவின் காரென் காச்சனோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
   மற்றொரு ஆட்டத்தில் 4-ஆம் நிலை வீரர் பெடரர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் போலந்தின் ஹுபர்ட் ஹுர்காûஸ எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
   இருவரும் அரையிறுதியில் மோதுகின்றனர். 38 முறை மோதியதில் நடால் 23 முறையும், பெடரர் 15 முறையும் வென்றுள்ளனர் பெடரர் 20, நடால் 17 என இருவரும் 37 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் களத்தில் சந்தித்து ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
   அதே நேரத்தில் காலிறுதி ஆட்டத்தின் போது நடால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட வலது முட்டியில் வலிக்காக சிகிச்சை பெற்று ஆடினார். கடந்த 3 மாதங்களாக மூட்டு வலியால் நடால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai