சுடச்சுட

  

  ஒருநாள் அணியில் இடம் பெறாததற்கு இஷாந்த், அஸ்வின் அதிருப்தி

  By DIN  |   Published on : 17th March 2019 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aswin

  பல்வேறு வகைப்பட்ட கருத்துகளால் ஒருநாள் அணியில் என்னால் இடம் பெற முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.
   மூத்த வீரரான இஷாந்த் சர்மா 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே இடம் பெற்று வருகிறார்.
   இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
   என்னை டெஸ்ட் ஆட்ட நிபுணர் எனக் கூறுவதை ஏற்கமுடியாது. வெவ்வேறு வகையான கருத்துகளால் நான் ஒரு நாள் அணியில் இடம் பெற முடியாமல் போய்விட்டது. இந்திய கிரிக்கெட்டில் கருத்துகளுக்கு எதிராக போராட முடியாது. எங்கிருந்து கருத்துகள் எழும்புகின்றன எனத் தெரியவில்லை. இவர் டி20 பந்துவீச்சாளர், டெஸ்ட் பந்துவீச்சாளர் என எவ்வாறு கூறுகின்றனர்.
   சிவப்பு நிற பந்தைக் கொண்டு நன்றாக பந்துவீசும் ஒருவரால், எத்தகைய முறை ஆட்டத்திலும் சிறப்பாக வீச முடியும். இதுதொடர்பாக தேர்வாளர் குழுவை நான் அணுகவில்லை. உண்மையை கூற வேண்டும் என்றால் நான் எவரிடமும் பேசுவதில்லை. என்னையே நான் நொந்து கொள்வேன் என்றார்.
   வெள்ளை நிற பந்தில் சிறப்பாகவே வீசுகிறேன்: அஸ்வின்
   வெள்ளை நிற பந்தில் நான் அருவருக்கத்தக்க வகையில் வீசவில்லை. சிறப்பாகவே வீசுகிறேன் என மூத்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வின் கடந்த 2017-இல் கடைசியாக ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றார். ஒருநாள் ஆட்டங்களில் என்னுடை சாதனைகள் எவருக்கும் சளைத்தவை இல்லை. கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் 3 விக்கெட்டுகளை எடுத்தேன். சையத் முஷ்டாக் டி 20 தொடரிலும் சிறப்பாகவே ஆடி 7 விக்கெட்டுகளை பெற்றேன் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai