சுடச்சுட

  

  *ஒழுங்கீனம் காரணமாக என்னை ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பவில்லை. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே என்னை திருப்பி அனுப்பினர் என இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.
   *மும்பை டி20 லீக் போட்டியில் ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் பட்டியலில் தனது பெயரை பதிவு செய்துள்ளார் ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.
   *புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதையடுத்து, ராணுவ வீரர்கள் நலனுக்காக ரூ.20 கோடி நிதியை வழங்குகிறது பிசிசிஐ சிஓஏ. வரும் 23-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் முப்படை உயரதிகாரிகளிடம் இந்த நிதி வழங்கப்படுகிறது.
   *நேபாளத்தின் பீரட்நகரில் நடைபெறும் தெற்காசிய மகளிர் கால்பந்து சாம்பியன் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து ஆடுகிறது. முதல் ஆட்டத்தில் மாலத்தீவை வென்றது இந்தியா.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai