சுடச்சுட

  

  ஸ்விஸ் ஓபன்: இறுதியில் சாய் பிரணீத்; ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார்

  By DIN  |   Published on : 17th March 2019 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sp

  ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி அரையிறுதியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் சென் லோங்கை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் சாய் பிரணீத்.
   பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடந்த அரையிறுதியில் 22-ஆம் நிலை வீரரான சாய் பிரணீத் 21-18, 21-13 என்ற கேம் கணக்கில் ரியோ ஒலிம்பிக் சாம்பியன் சென் லோங்கை வீழ்த்தினார். முதல் கேமில் மட்டுமே ஒரளவு எதிர்ப்பு காண்பித்த லோங், இரண்டாவது கேமில் சரண் அடைந்தார். 46 நிமிடங்களில் ஆட்டம் முடிவுற்றது.
   இருவரும் நேருக்கு நேர் மூன்று முறை சந்தித்ததில் இது பிரணீத்தின் முதல் வெற்றியாகும். இறுதிச் சுற்றில் முதல்நிலை வீரர் சீனாவின் ஷி யுகியை எதிர்கொள்கிறார் சாய் பிரணீத்.
   லக்ஷயா சென் போராடி தோல்வி: கடந்த 2017-இல் தாய்லாந்து ஓபன் வெற்றிக்கு பின் பிரணீத் மீண்டும் பட்ட வெல்லும் முனைப்பில் உள்ளார். இதற்கிடையே சீன மாஸ்டர்ஸ் போட்டி அரையிறுதிச் சுற்று ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இந்திய இளம் நட்சத்திரம் லக்ஷயா சென் 21-9, 12-21, 17-21 என்ற கேம் கணக்கில் உள்ளூர் வீரர் ஹோங்யாங்கிடம் வீழ்ந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai