சுடச்சுட

  

  17 வயது மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இந்தியாவில் நடக்கிறது

  By DIN  |   Published on : 17th March 2019 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  WWC_CUP

  வரும் 2020-இல் 17 வயதுக்குட்பட்டோர் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த பிஃபா அனுமதி அளித்துள்ளது.
   மியாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிஃபா கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2017-இல் 17 வயதுக்குட்பட்டோர் ஆடவர் உலகக் கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
   இதன் தொடர்ச்சியாக மகளிர் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு தரப்பட்டுள்ளது. இதனால் இந்திய மகளிர் கால்பந்துக்கு புதிய உத்வேகம் பிறக்கும்.
   தேசிய அணிக்கு சர்வதேச அனுபவம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் தொடக்க ஆட்டத்தில் ஆடும் எனத் தெரிகிறது. கடந்த 2018-இல் உருகுவேயில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் ஸ்பெயின் இறுதி ஆட்டத்தில் மெக்ஸிகோவவை வென்றது. நியூஸிலாந்து, கனடா முறையே 3, 4-ஆவது இடங்களைப் பெற்றன.
   இதுதொடர்பாக 17 வயது ஆடவர் உலகக் கோப்பை இயக்குநர் சேவியர் செப்பி கூறுகையில்-இந்தியாவுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. இந்திய மகளிர் கால்பந்துக்கு உன்னதமான நிலை ஏற்படும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai