சுடச்சுட

  

  'தல பாட்டு போட..நான் டான்ஸ் ஆட': தெறிக்க விட்ட ஹர்பஜன் சிங்

  By DIN  |   Published on : 17th March 2019 01:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  harbhajan_singh

   

  சென்னை: தல பாட்டு போட..நான் டான்ஸ் ஆட என்று விரைவில் துவங்க உள்ள ஐ.பி.எல் போட்டிகள் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

  முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கடந்த ஆண்டில் இருந்து ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்காக விளையாடி வருகிறார்.  இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக அந்த அணியின் வீரர்கள் பயிற்சிக்காக சிலநாட்களுக்கு முன்பு சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.  தற்போது அணி வீரர்களை வைத்து 'ப்ரோமோ விடியோ' எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

  இந்நிலையில் தல பாட்டு போட..நான் டான்ஸ் ஆட என்று விரைவில் துவங்க உள்ள ஐ.பி.எல் போட்டிகள் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

  ப்ரோமோ விடியோ ஒன்றிலிருந்து சிறு பகுதியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது:

  வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல @msdhoni பாட்டு போட நான் @mvj888 @JadhavKedar டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த @ChennaiIPL லோட ஆட்டத்த #YelloveAgain

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  கடந்த வருடமும் இவ்வாறு ஹர்பஜன் தமிழில் ட்விட்டரில் பதிவுகள் இட்டது குறிப்பிடத்தக்கது.   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai