ஏடிபி தரவரிசையில் 84-ஆவது இடம்: பிரஜ்னேஷ் அபாரம்

ஏடிபி தரவரிசையில் 84-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்திய நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
ஏடிபி தரவரிசையில் 84-ஆவது இடம்: பிரஜ்னேஷ் அபாரம்


ஏடிபி தரவரிசையில் 84-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்திய நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
பிரஜ்னேஷ் 97-ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தியன்வெல்ஸ் ஏடிபி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகின் 18-ஆம் நிலை வீரர் நிக்கோலோஸ் பஷிலாஸ்விலியை வென்றார். இதன் மூலம் 61 புள்ளிகளை ஈட்டிய அவர், 13 இடங்கள் முன்னேறி 84-ஆவது இடத்தைப் பிடித்தார்.
ராம்குமார் ராமநாதன் 139 ஆவது இடத்தில் உள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் யுகி பாம்ப்ரி 36 இடங்கள் பின்தள்ளப்பட்டு 207-ஆவது இடத்தில் உள்ளார்.
கடந்த 2018-இல் யுகி பாம்ப்ரி 83-ஆவது இடத்தை பெற்றிருந்ததே ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் செய்த சாதனையாகும்.
இரட்டையர் பிரிவிர் ஜீவன் நெடுஞ்செழியன் 64-ஆவது இடத்தில் உள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com