ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை

வரும் 2020 டோக்கிய ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாகவே ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை என நட்சத்திர
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக ஆசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை

வரும் 2020 டோக்கிய ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாகவே ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை என நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-இல் 6-ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்ற அவர் தாய்லாந்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பங்கேற்பதே எனது நோக்கம். இந்த ஆண்டு எனக்கு மிகவும் முக்கியமான ஆண்டு. ரஷியாவின் ஏகடெரின்பர்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி மூலம் ஒலிம்பிக் தகுதி பெற விரும்புகிறேன். இதன் ஒரு திட்டம் தான், ஆசிய போட்டியில் கலந்து கொள்ளாதது.
எனது 51 கிலோ பிரிவில் எதிராளிகள் நிலை குறித்து அறிய வேண்டியுள்ளது. இதனால் தான் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கிறேன். முதலில் இந்தியாஓபன் போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் பங்கேற்க வேண்டும். முறையாக திட்டமிடாமல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாது. இதனால் தான் முக்கிய போட்டிகளை தேர்வு செய்து கலந்து கொள்கிறேன் .
மேரி கோம் வழக்கமாக பங்கேற்கும் 48 கிலோ எடைப் பிரிவு ஒலிம்பிக்கில் இல்லை. இதனால் அவர் 51 கிலோ எடைப் பிரிவை தேர்வு செய்துள்ளார். கடந்த ஓராண்டாக 51 கிலோ பிரிவில் பயிற்சி எடுத்து வருகிறேன்.
ஓய்வு பெற்றாலும், எனக்கு பெயரும் புகழும் அளித்த குத்துச்சண்டை விளையாட்டிலேயே பங்களிப்பேன். இந்திய அரசு அல்லது குத்துச்சண்டை சம்மேளனமோ ஆட்டத்தை மேம்படுத்த எனது சேவை தேவை எனத் தெரிவித்தால் எப்போதும் தயாராக உள்ளேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com