முதல் டெஸ்ட் வெற்றியுடன் வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்

அயர்லாந்துக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.
வெற்றிக் கோப்பையுடன் ஆப்கன் வீரர்கள்.
வெற்றிக் கோப்பையுடன் ஆப்கன் வீரர்கள்.

அயர்லாந்துக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.
கிரிக்கெட் உலகில் டெஸ்ட் ஆட்டத்தில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இரு அணிகளும் அனுபவமில்லாதவை. கடந்த 2018-இல் தான் இரு அணிகளும் டெஸ்ட் அந்தஸ்து பெற்றன. மேலும் ஆப்கன் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவுடனும், அயர்லாந்து முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடனும் மோதி தோல்வியுற்றன.
இதற்கிடையே இரு அணிகளுக்கு இடையே ஒருநாள், டி20, ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் கொண்ட தொடர் டேராடூனில் நடைபெற்றது. 
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் நடைபெறுவதால், டேராடூனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மற்றும் சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுடன் ஆல் அவுட்டானது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 314 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. (ரஹ்மத் ஷா 98, ஹஸ்மத்துல்லா 61, அஷ்கர் ஆப்கன் 67) ரன்களை குவித்தனர். அயர்லாந்து தரப்பில் ஸ்டுவர்ட் தாம்ப்சன் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து 288 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. (ஆன்ட்ரு பால்பைர்னி 82, கெவின் ஓ பிரையன் 56) ரன்களை குவித்தனர். ஆப்கன் தரப்பில் ரஷீத் கான் அபாரமாக பந்துவீசி 5-82 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆட்டத்தின் நான்காம் நாளான திங்கள்கிழமை 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஈஷானுல்லா ஜனத் 65, ரஹ்மத் ஷா 76) ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனர். 47.5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆப்கன் அணி.
7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்.
ரஹ்மத் ஷா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com