லா லிகா: மெஸ்ஸி 51-ஆவது ஹாட்ரிக்

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பார்சிலோனா. அதன் கேப்டன் மெஸ்ஸி 51-ஆவது ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்தார்.
லா லிகா: மெஸ்ஸி 51-ஆவது ஹாட்ரிக்


ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பார்சிலோனா. அதன் கேப்டன் மெஸ்ஸி 51-ஆவது ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்தார்.
லாலிகா பட்டியலில் ஏற்கெனவே முதலிடத்தில் உள்ள பார்சிலோனா இந்த வெற்றி மூலம் அதெலெட்டிக்கோ மாட்ரிட் அணியை விட 10 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளது. மெஸ்ஸி இந்த சீசனில் அடித்த 4-ஆவது ஹாட்ரிக் கோலாகும். ஏற்கெனவே கோபா டெல் ரெ போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது பார்சிலோனா.
லாரென் மோரன் ரியல் பெட்டிஸ் அணிக்கு ஆறுதல்கோலை அடித்தார். 
லிவர்பூல் முதலிடம்
இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி முதலிடம் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு கிரேவன் காட்டேஜ் மைதானத்தில் புல்ஹாமுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது லிவர்பூல். இந்த வெற்றி மூலம் ப்ரீமியர் லீகில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி2-ஆவது இடத்தில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com