உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் ஐபிஎல் போட்டி முக்கிய பங்கு வகிக்கும்

உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் ஐபிஎல் போட்டி முக்கிய பங்கு வகிக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் ஐபிஎல் போட்டி முக்கிய பங்கு வகிக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ, தேர்வுக் குழு மும்முராக உள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் ஆட்டங்கள் வரும் 23-ஆம்  தேதி தொடங்கி மே முதல் வாரம் வரை நடைபெறுகிறது.
அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 2-3 என தோல்வியை தழுவியது இந்திய அணி. எனினும் ஐபிஎல் போட்டியில் வீரர்களின் செயல்பாடு, உலகக் கோப்பை அணித் தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என கேப்டன் கோலி கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு மாறாக தற்போது ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய அணியில் நான்காம் நிலை பேட்ஸ்மேன், இரண்டாவது விக்கெட் கீப்பர் இடங்களை நிரப்புவது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் மாத மத்தியில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யபடும் எனத் தெரிகிறது. 
நான்காம் நிலை பேட்ஸ்மேன்: நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்துக்கு ரஹானே, அம்பதி ராயுடு, ஷிரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ஐபிஎல் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோரில் எவராவது நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்துக்கு தேர்வு செய்யப்படுவார்.
இதனால் தான் ஐபிஎல் ஆட்டங்கள் மிகவும் முக்கியமானவை எனக் கருதப்படுகிறது.
ஆஸி. தொடரின் போதே அனைத்து இடங்களையும் நிரப்பலாம் என தீர்மானித்தபோது, அதற்கு எதிர்மாறாக நடைபெற்றது. கேப்டன் கோலியை நான்காம் இடத்தில் களமிறக்கலாம் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் தெரிவித்திருந்தார்.
அது ஆட்டச் சூழலைப் பொருத்து அமையும். எனினும் கோலி நான்காம் நிலை பேட்ஸ்மேனாக செல்ல மாட்டார். நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் எந்த வீரரும் நிலையாக ஆடவில்லை. ரஹானே, ஷிரேயஸ் ஐயர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடி உலகக் கோப்பை அணியில் இடம்பெறலாம்.
இரண்டாவது விக்கெட் கீப்பர்: தோனிக்கு அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளனர். ஆஸி.யுடன் நடைபெற்ற டி20 தொடரில் மட்டுமே தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார். 5 ஆட்டங்கள் ஒருநாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
ரன்களை குவித்து, அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடினால் தானாகவே உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவேன் என்றார் ரஹானே
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com