ஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2019 போட்டியின் முழு ஆட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன்-இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்சிபி கேப்டன் விராட் கோலியுடன்-இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.


ஐபிஎல் 2019 போட்டியின் முழு ஆட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. எனினும் பிளே ஆஃப் மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கான தேதி வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் பிரபலமான விளையாட்டுகளில் முதலிடத்தை பெற்றுள்ள ஐபிஎல் 2019 போட்டி 12-ஆவது சீசன் வரும் 23-ஆம் தேதி சென்னையில் சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்குகிறது.
ஏற்கெனவே ஐபிஎல் முதல் கட்ட ஆட்டங்களின் அட்டவணை (முதல் 2 வாரங்கள்) ஏப்ரல் 5-ஆம் தேதி வரை மட்டும் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் மீதமுள்ள ஆட்டங்கள் அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்தில் 7 ஆட்டங்களில் ஆடும். குழு ஆட்டங்கள் மே 5-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. 
அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் ஒத்துழைப்பு தருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் உள்ளூர், வெளியூர் ஆட்டங்கள் சிக்கலின்றி நடைபெறவுள்ளன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிசிசிஐ சார்பில் முழு அட்டவணை வெளியிடப்பட்ட து.

பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம்

பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கான தேதி, இடம் அறிவிக்கப்படவில்லை. அவை பின்னர் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com