பாட்மிண்டன் தரவரிசை: முதல் 100 இடங்களில் லக்ஷயா, ரியா

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து இளம் இந்திய நட்சத்திரங்கள் லக்ஷயா சென், ரியா முகர்ஜி சாதனை படைத்துள்ளனர்.
பாட்மிண்டன் தரவரிசை: முதல் 100 இடங்களில் லக்ஷயா, ரியா


சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்து இளம் இந்திய நட்சத்திரங்கள் லக்ஷயா சென், ரியா முகர்ஜி சாதனை படைத்துள்ளனர்.
உலக பாட்மிண்டன்சம்மேளனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியலில் லக்ஷயா சென் 28 இடங்கள் முன்னேறி 76-ஆவது இடத்திலும், மகளிர் பிரிவில் ரியா முகர்ஜி 19 இடங்கள் முன்னேறி 94-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் சாம்பியன் சென்லோங்கை வென்ற சாய் பிரணீத் 3 இடங்கள் முன்னேறி 19-ஆவது இடத்தில் உள்ளார்.
ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 7-ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஜப்பான் வீரர் கென்டோ மொமடோ முதலிடத்தில் உள்ளார். சீனாவின் யுகி  இரண்டாவது இடத்தை வகிக்கிறார்.
மகளிர் பிரிவில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா ஆகியோர் முறையே 6 மற்றும் 9-ஆவது இடங்களை வகிக்கின்றனர். 
சீன தைபேவின் டை சூ, சீனாவின் சென் யூபெய், ஜப்பானின் நúஸாமி ஒகுஹரா ஆகியோர் முதல் மூன்றிடங்களில் உள்ளனர்.
இரட்டையர் பிரிவில் சத்விக்-சிராக் ஷெட்டி 24-ஆவது இடத்தில் உள்ளனர். மகளிர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி 23-ஆவது இடத்திலும், கலப்பு பிரிவில் அஸ்வினி-ரங்கிரெட்டி 24-ஆம் இடத்திலும் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com