தோனி 4-ஆவது நிலை பேட்ஸ்மேனாக களமிறங்குவார்: ஸ்டீபன் பிளெம்மிங்

ஐபிஎல் ஆட்டங்களில் தோனி நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமம் பெற்ற சீருடை உள்ளிட்ட பொருள்களை அறிமுகம் செய்யும் தலைமை பயிற்சியாளர் பிளெம்மிங் மற்றும் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமம் பெற்ற சீருடை உள்ளிட்ட பொருள்களை அறிமுகம் செய்யும் தலைமை பயிற்சியாளர் பிளெம்மிங் மற்றும் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ்.


ஐபிஎல் ஆட்டங்களில் தோனி நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியுள்ளார். எனினும் இது சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளப்படும்  எனவும் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணியின்சீருடை மற்றும் ரசிகர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அறிமுக விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
பிளெம்மிங்-கேதார் ஜாதவ் ஆகியோர் புதிய சீருடைகளை அறிமுகம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிளெம்மிங் கூறியதாவது:
தற்போது 10-ஆவது ஆண்டாக தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்திச் செல்கிறார். கேதார் ஜாதவ் இடம்பெற்றுள்ளது, பேட்ஸ்மேன் இடங்களை தேவைக்கு ஏற்ப மாற்றும் வாய்ப்பை தந்துள்ளது. கடந்த சீசனிலும் 4-ஆம் நிலையிலேயே தோனி களமிறங்கினார். தேவைக்கு ஏற்ப அவரை பயன்படுத்தவும் செய்வோம்.
கேதார் ஜாதவ் கடந்த முறை காயத்தால் விளையாட முடியவில்லை. சென்னை அணியில் 30 வயது வீரர்கள் பலர் இருந்தாலும், அவர்களின் மனநிலைப்பாட்டால் கடந்த முறை பட்டம் வென்றோம். மற்ற அணிகளுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை. மற்ற அணிகளை நோக்கி கவனத்தை செலுத்தினால், நமது அணியில் எது தேவை, தேவையில்லை என்பதை அறிய முடியாது.
கடந்த முறை நெருக்கடியான சூழலில் பெரிய வெற்றிகளை பெற்றோம். கேதார் ஜாதவ், டுபௌஸிஸ், வாட்ஸன், மிச்செல் சான்ட்நர், ஆகியோர் அணிக்கு துணையாக இருப்பர். இம்ரான் தஹீர், கரண் சர்மா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரை உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடச்செய்வதே நோக்கம் என்றார் பிளெம்மிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com