சிறப்பு ஒலிம்பிக் போட்டி: 368 பதக்கங்களை வென்றது இந்தியா
By DIN | Published On : 22nd March 2019 01:03 AM | Last Updated : 22nd March 2019 01:03 AM | அ+அ அ- |

வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அளிக்கப்பட்ட விருந்து.
அபு தாபியில் நடைபெற்றுவந்த சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கோடைக்கால விளையாட்டுப் போட்டியில் இந்தியா 368 பதக்கங்களை அள்ளி வந்துள்ளது.
இந்திய தடகள வீரர்கள் மட்டும் 154 வெள்ளி, 129 வெண்கலம் வென்றுள்ளனர்.
பளுதூக்குதல் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்துள்ளது. அதாவது, இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 20 தங்கம், 33 வெள்ளி, 43 வெண்கலம் வென்றுள்ளனர் இந்தியர்கள்.
ரோலர் ஸ்கேட்டிங்கில் 13 தங்கம், 20 வெள்ளி, 16 வெண்கலமும், சைக்கிள் பந்தயத்தில் இந்தியா 11 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் உள்பட 45 பதக்கங்களை குவித்துள்ளது.
தடகளத்தில் டிராக் அன்ட் ஃபீல்ட் பிரிவில் இந்தியா 5 தங்கம், 24 வெள்ளி, 10 வெண்கலம் உள்பட 39 பதக்கங்களை வென்றது.
பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு துபையில் இந்தியத் தூதரகத்தில் விருந்து அளிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...