டெஸ்ட் சீருடையில் பெயர், எண் பொறிக்க ஐசிசி அனுமதி

டெஸ்ட் ஆட்டங்களின்போது வீரர்கள் அணியும் சீருடையில் பெயர் மற்றும் எண்ணை பொறிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி தந்துள்ளது.


டெஸ்ட் ஆட்டங்களின்போது வீரர்கள் அணியும் சீருடையில் பெயர் மற்றும் எண்ணை பொறிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி தந்துள்ளது. டெஸ்ட் ஆட்டங்களை மேலும் பிரபலமடையச் செய்யும் வகையில் ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 
5 நாள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டங்களில் அணிகளின் வீரர்கள் வெள்ள நிற சீருடைகளை அணிந்து ஆடுகின்றனர். 
இங்கிலாந்து கவுண்டி மற்றும் ஆஸ்திரேலிய ஷெப்பில்ட் ஷீல்ட் ஆட்டங்களில் வெள்ளை சீருடையில் வீரர் பெயர், எண் பொறிக்கப்படுகிறது. 
இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற ஐசிசி அனுமதி தந்துள்ளது.
இப்போட்டியில் மே.இ.தீவுகளுடன் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் மோதும் இந்திய அணி சீருடையில் பெயர், எண் பொறிக்கப்பட்டிருக்கும்.
அதன்படி கேப்டன் கோலி தனது சீருடையில் எண்.18 அச்சடிக்கப்பட்டு ஆடவுள்ளார். இது இந்தி அணிக்கு புதுமையான அனுபவமாகும். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது டெஸ்டை மேலும் பிரபலமடையச் செய்யும் உத்தி என ஐசிசி தகவல் தொடர்பு பொதுமேலாளர் கிளேயர் புர்லோங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் டெண்டுல்கரின் எண்.10, தோனியின் எண்.7 போன்றவை பயன்படுத்தப்படாது எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com