மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நவோமி ஒஸாகா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸி. வீரர் பெர்னார்ட் டோமிக்கை வென்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீரர் டொமினிக் தீம் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போலந்து வீரர் ஹூபர்ட்டிடம் வீழ்ந்தார். ஜப்பான் வீரர் நிஷிகோரியும் தனது ஆட்டத்தில்
தோல்வியுற்றார்.
மகளிர் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒஸாகா 6-0, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் யானினாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செரீனா வில்லியம்ஸ் 6-3, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ரெபக்காவையும், வீனஸ் வில்லியம்ஸ் 7-6, 6-1 என ஸ்பெயினின் கார்லா ஸ்வரûஸயும் வென்றனர்.
இளம் வீராங்கனை ஆன்ட்ரீஸ்கு 6-3, 6-3 என சோபியாவையும், கெர்பர் 3-6, 6-3, 6-3 என கரோலினாவையும் வென்றனர்.