ஹைதராபாத்}கொல்கத்தா, மும்பை}தில்லி அணிகள் இன்று மோதல்

பலம் வாய்ந்த கொல்கத்தா  நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் |ஞாயிற்றுக்கிழமை தங்கள் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

பலம் வாய்ந்த கொல்கத்தா  நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் |ஞாயிற்றுக்கிழமை தங்கள் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.

தடைக்காலம் முடிந்து ஆஸி. அதிரடி வீரர் டேவிட் வார்னர் மீண்டும் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ள நிலையில் அந்த அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது. முழங்கை காயத்தில் இருந்து மீண்ட வார்னர், ஆஸியில் நடைபெற்ற உள்ளூர் லீக் ஆட்டத்தில் அபார சதமடித்தார். 

கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பெற்ற ஹைதராபாத்தும்}}2 முறை சாம்பியன் கொல்கத்தாவும் மோதுவதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது இந்த ஆட்டம்.

வார்னர் தலைமையில் 2016, 2017}இல் பட்டம் வென்றது ஹைதராபாத். கடந்த சீசனில் வார்னர் இல்லாத நிலையில் நியூஸி கேப்டன் கேன் வில்லியம்ஸன் தலைமையில் ஹைதராபாத் பங்கேற்றது. பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், ரஷீத் கான், விஜய் சங்கர், ஷபாஸ் நதீம், அபிஷேக் சர்மா ஆகியோர்  வலு சேர்க்கின்றனர். ஷிகர் தவன் தில்லி  அணிக்கு இடம் மாறி விட்டதால், தொடக்க வரிசை பேட்டிங் சோபிக்குமா எனத் தெரியவில்லை.

அதே நேரத்தில் தோளில் காயமடைந்திருந்த கேன் வில்லியம்ஸன் முதல் ஆட்டத்தில் ஆட மாட்டார் எனத் தெரிகிறது. எனினும் காயத்தின் தன்மையை பொறுத்து அடுத்து வரும் ஆட்டங்களில் அவர் இடம் பெறுவார் என பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலலான கொல்கத்தா அணி பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. கடந்த சீசனில் 3}ஆம் இடத்தைப் பெற்ற இந்த அணியில் கார்லோஸ் பிராத்வொயிட், ஆன்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், கிறிஸ் லீன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தில்லி - மும்பை மோதல்

மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த  சீசனில் இடம் பெற்ற வீரர்களில் பெரும்பாலானவர்களை தக்க வைத்துள்ளது மும்பை. அதே நேரத்தில் தில்லி அணியின் பெயர் மாற்றப்பட்டு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியதில் இரு அணிகளும் தலா 11 முறை வென்றுள்ளன. 

மும்பை அணியில் பும்ரா, ஹார்திக் பாண்டியா ஆகியோர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடும். உலகக் கோப்பைக்கான அணித் தேர்வும் பின்னர் நடக்கவுள்ளதால், வீரர்களே தங்கள் ஆட்டச்சுமையை பார்த்துக் கொள்ளவேண்டும் எனகேப்டன் ரோஹித் கூறியுள்ளார். மேலும் யுவராஜ் சிங், பொல்லார்ட், பென் கட்டிங், சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கிலும், பரீந்தர் சரன், மிச்செல் மெக்கிளேனகன், க்ருணால்பாண்டியா, ஜெயந்த் யாதவ், அங்குல் ராய், ராகுல் சஹார், மயங்க் மார்கண்டே பந்துவீச்சிலும் தங்கள் பங்கை ஆற்றுவர்.

தில்லி அணியில் தவன், ஷிரேயஸ் ஐயர், ரிஷப்பந்த், பிரித்வி ஷா, மஞ்சோத் கர்லா, காலின் மன்றோ, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்ப்பர். பந்துவீச்சும் பெளல்ட், காகிúஸô ரபாடா, நாது சிங் ஆகியோரால் பலம் பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்
ஹைதராபாத்}கொல்கத்தா,
இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா. நேரம்: மாலை 4.00.
தில்லி-மும்பை,
இடம்:வாங்கடே மைதானம், மும்பை. நேரம்: இரவு 8.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com