மியாமி ஓபன்: இரட்டையர் பிரிவு காலிறுதியில் போபண்ணா-டெனிஸ் இணை

பிரசித்தி பெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா-ரஷியாவின் டெனிஸ் ஷபலபோவ் தகுதி பெற்றனர்.
மியாமி ஓபன்: இரட்டையர் பிரிவு காலிறுதியில் போபண்ணா-டெனிஸ் இணை

பிரசித்தி பெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா-ரஷியாவின் டெனிஸ் ஷபலபோவ் தகுதி பெற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் 7-ஆம் நிலை இணை கிரானோலர்ஸ்-மெகேடிக்கை 6-1, 6-2 என நேர் செட்களில் வென்றனர் போபண்ணா-டெனிஸ் இணை.
ஜோகோவிச், சிமோனா வெற்றி:
ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 7-5.4-6, 6-1  என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் போராடி பெட்ரிகோ டெல்போனிஸை வீழ்த்தினார். பட்டிஸ்டிடா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பேபியோ போக்னியையும், நடப்பு சாம்பியன் ஜான் ஐஷ்நர் 7-5.7-6 என ராமோஸ் வினோலாஸையும் வீழ்த்தினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலேப் 5-7, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் போலோனா ஹெர்காக்கை போராடி வென்று 4-ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றார். வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-1 என ரஷியாவின் டாரியாவை வென்றார். ஜெர்மனியின் டஜானா 6-3, 6-2  என நடப்பு சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபென்ஸை வென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com