யூரோ 2020: ஜெர்மனி, ஹங்கேரி வெற்றி

யூரோ 2020 கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி, ஹங்கேரி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.
வெற்றி மகிழ்ச்சியில் ஜெர்மனி வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் ஜெர்மனி வீரர்கள்.


யூரோ 2020 கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி, ஹங்கேரி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.
ஆம்ஸ்டர்டாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி. கடந்த 2018 ரஷிய உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்த முன்னாள் சாம்பியன் ஜெர்மனி, தனது அணியை கட்டமைத்து வருகிறது. பயிற்சியாளர் ஜோசிம் லீயு மூத்த வீரர்களை அகற்றி விட்டு இளம் வீரர்களை சேர்த்துள்ளார்.
ஜெர்மனி தரப்பில் லியரோய் சேன், ஜெர்ஜி நப்ரி கோலடித்ததால் 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் நெதர்லாந்து தரப்பில் மேட்டிஸ் லைட், மெம்பிஸ் டிபே ஆகியோர் கோலடித்தனர். இதனால் 2-2 2 என சமநிலை  ஏற்பட்டது. ஆட்டம் முடிய சிறிது நேரம் இருந்த நிலையில் 90-ஆவது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் நிகோ ஷூல்ட்ஸ் வெற்றி கோலை அடித்தார். இறுதியில் 3-2 என ஜெர்மனி வென்றது.
குரோஷியா அதிர்ச்சித் தோல்வி: புடாபெஸ்டில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உலகக் கோப்பை ரன்னர்  அணியான குரோஷியா 1-2 என ஹங்கேரியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. கேப்டன் லுகா மொட்ரிக் போராடியும், ஹங்கேரியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. குரோஷிய  தரப்பில் ஆன்டெ ரெபிக் முதல் கோலடித்தார். பின்னர் ஹங்கேரி வீரர்கள் ஆடம் ஸலாய், மேட் பேட்கேய் ஆகியோர் கோலடித்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் சைப்ரஸை 2-0 என வென்றது பெல்ஜியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com