Enable Javscript for better performance
ஐபிஎல்: 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல்: 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி

    By DIN  |   Published on : 27th March 2019 11:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ipl


    இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.

    இவர்களில் கிறிஸ் லின் 10 ரன்களுக்கும், சுனில் நரைன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து  ராணா 63, ரஸல் 17 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 48 ரன்கள் எடுத்தார், ஆட்டமிழக்காமல்  உத்தப்பா 67, கார்த்திக் 1 ரன்களும் எடுத்தனர்.

    இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.

    219 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பஞ்சாப் அணி இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்விடையந்தது.
    அணியில் ராகுல்1, கெயில் 20 ரன்கள் என ஆட்டமிழக்க அடுத்து மயங்க் அகர்வால்  58, சர்ப்ராஸ் கான் 13, மில்லர் 59, மந்தீப் சிங் 33 ரன்களை எடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai