ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் புரூஸ் யார்ட்லி காலமானார்

1978 முதல் 1983 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 33 டெஸ்டுகளும் 7 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியுள்ளார் யார்ட்லி...
legend Bruce Yardley dies
legend Bruce Yardley dies

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் புரூஸ் யார்ட்லி இன்று காலமானார்.

2016-ல் அவருக்குப் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் உடல்நலக்குறைவுடன் இருந்த யார்ட்லி தனது 71-வது வயதில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியன் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். 

1978 முதல் 1983 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 33 டெஸ்டுகளும் 7 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியுள்ளார் யார்ட்லி. ஆஃப் ஸ்பின்னராக அடையாளம் பெற்ற யார்ட்லி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 126 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 டெஸ்ட் அரை சதங்கள் எடுத்துள்ள யார்ட்லி, அனைவரையும் அச்சுறுத்திய மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 1978-ல் 29 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆஸ்திரேலியாவின் அதிவேக டெஸ்ட் அரை சதமாக இந்தச் சாதனை 38 வருடங்கள் நீடித்தது. 2017-ல் வார்னர் இதை முறியடித்தார். யார்ட்லி, 1990களின் இறுதியில் இலங்கை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com