கனோர் மெக் கிரிகோர் MMA போட்டிகளில் இருந்து ஓய்வு! சூப்பர் ஸ்டார் இல்லைன்னா ரசிக மனம் தாங்குமா?!

இம்முறை விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக மெக் அறிவித்தது உண்மையா? அல்லது முன்பைப் போலவே இதுவும் கூட அடுத்த UFC மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ் போட்டியின் வரலாறு காணாத வெற்றிக்காகத் திட்டமிட்டு UFC 

UFC  அதாவது அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் என்பது மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய ரெஸ்லிங், பாக்ஸிங், கிக் பாக்ஸிங், ஜூடோ, கராத்தே இவை அத்தனையையும் ஒரு சேரப் பயன்படுத்தி ஆடக்கூடிய ஒரு வகை ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் கேம்களை ஊக்கப்படுத்தக் கூடிய ஒரு நிறுவனம். சுருக்கமாகச் சொல்வதென்றால் WWF ரெஸ்லிங் ஃபைட்டர் கேம் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் அண்டர்டேக்கர், ராக் உள்ளிட்டோர் எப்படி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறார்களோ அப்படி UFC சாம்பியன்ஷிப் விளையாட்டுகளின் சூப்பர் ஸ்டாராகத் திகழக்கூடியவர் கனோர் மெக் கிரிகோர். ரசிகர்கள் இவர் கலந்து கொள்ளும் ஃபைட்டர் சாம்பியன்ஷிப் ஷோக்களைக் காண பேராவலுடன் காத்திருக்க இவரோ திடீரென சமூக வலைத்தளத்தில் இனிமேல் தான் UFC சாம்பியன்ஷிப் ஷோக்களில் ஆடப்போவதில்லை என்றும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

மெக்கிரிகோர் இப்படி அறிவிப்பது முதல்முறை அல்ல, இதற்கு முன்பும் இப்படிப்பட்ட ரிட்டயர்மெண்ட் அறிவிப்புகளை இவர் மேற்கொண்டிருந்த காரணத்தால் ரசிகர்களுக்கு மெக்கிரிகோரின் அறிவிப்பால் குழப்பம்.

முன்பொருமுறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தரப்புக்கும், மெக்கிரிகோருக்கும் இடையே மீடியா விளம்பரக் கமிட்மெண்டுக்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியாத காரணத்தால் இதே போல மெக், விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இது நடந்தது UFC 200 நிகழ்ச்சிக்கு முன்பாக. ஆனால், சில நாட்களிலேயே அதே UFC, ஐரிஷ்மேன் மெக்கிரிகோர் UFC 202 ல் நேட் டயஸுடன் மோதவிருப்பதாக அறிவித்தது. அந்த மேட்ச் அதிரிபுதிரியாக அமைந்ததில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் பெருத்த லாபம். அந்த ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமே பை ரேட் 1.65 மில்லியனாக இருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் போட்டியில் மெக், டயஸை வென்றார். UFC வரலாற்றில் நிறுவனத்திற்கு highest grossing PPV பெற்றுத் தந்தது அந்த ஒரு நாள் போட்டி.

போட்டியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆடக்கூடியவராக இருந்தபோதும் மெக் ஒருமுறை Nevada Athletic Commission (NAC) மூலமாக UFC விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டவராகவும் இருந்தார். காரணம் அதே... கரணம் தப்பினால் மரணம் என்று ஆடக்கூடிய இவ்வகை விளையாட்டுகளில் மெக்கின் ஆர்வம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையே சில சமயங்களில் பயமுறுத்துவதாக அமைந்திருந்தது தான். அத்துடன் மெக் பணத்தைத் தாண்டி, தனது விளையாட்டுக்கு நிகராக UFC யின் பங்குகளையும் கோரக்கூடியவராக இருந்தந்தை நிறுவனம் ரசித்ததாகத் தெரியவில்லை.

இம்முறை விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக மெக் அறிவித்தது உண்மையா? அல்லது முன்பைப் போலவே இதுவும் கூட அடுத்த UFC மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ் போட்டியின் வரலாறு காணாத வெற்றிக்காகத் திட்டமிட்டு UFC நிறுவனமும் மெக்கும் சேர்ந்து ஆடும் கள்ள ஆட்டமா? என்பது அடுத்து வரவிருக்கும் போட்டிக்கான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்களின் போது தெரியவரும் என்கிறார்கள் மெக்கின் இயல்பை நன்கறிந்தவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com