சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.


சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
முதல் பாதியில் ஆதிக்கம் இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில் 17-ஆவது நிமிடத்தில் சுமித் கோலடித்தார். எனினும் உடனடியாக பதில் தாக்குதலில் ஈடுபட்ட மலேசிய அணி வீரர் ரேஸி ரஹிம் 21-ஆவது நிமிடத்தில் கோலடித்தார். அதற்கு பதிலடியாக 27-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுமித்குமார் இரண்டாவது கோலை அடித்தார். முதல் பாதி முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 37-ஆவது நிமிடத்தில் வருண்குமார் கோலடித்தார். 
57-ஆவது நிமிடத்தில் மலேசிய வீரர் டெங்கு தஜுதின் கோலடித்த நிலையில் அடுத்த ஒரு நிமிடத்தில் இந்திய கேப்டன் மந்தீப் சிங் வெற்றி கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com