Enable Javscript for better performance
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றது மானு பேக்கர் இணை- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றது மானு பேக்கர் இணை

    By DIN  |   Published on : 28th March 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manu,-saurav


    ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், கலப்பு குழுவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர், சௌரவ் சௌதரி இணை தங்கம் வென்று அசத்தியது.
    அத்துடன், தகுதிச்சுற்றில் 784 புள்ளிகள் கைப்பற்றி உலக சாதனையையும் இந்த இணை முறியடித்தது. கடந்த 5 தினங்களுக்கு முன்புதான் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விடாலினா பட்சராஷ்கினா-ஆர்தெம் செர்னௌசவ் இணை உலக சாதனை படைத்திருந்தது. 17வயது மானு பேக்கரும், 16 வயது சௌரவ் சௌதரியும் துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து தங்கம் வென்று வருகின்றனர்.
    தைபேவின் டாவ்யுவான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் கலப்பு குழு பிரிவில் இந்திய இணை, 484.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.
    கொரியா 481.1 புள்ளிகளை பெற்று வெள்ளியும், தைபே இணை 413.3 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றது. 
    அனுராதா, அபிஷேக் வர்மா ஆகியோர் கொண்ட மற்றொரு இந்திய இணை, 372.1 புள்ளிகள் பெற்று 4ஆவது இடம் பிடித்தது.
    இந்தத் தகவல் தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் (என்ஆர்ஏஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai