Enable Javscript for better performance
ஆஸி.க்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்: பாக். அணிக்கு 267 ரன்கள் இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஆஸி.க்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்: பாக். அணிக்கு 267 ரன்கள் இலக்கு

    By DIN  |   Published on : 28th March 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.
    267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
    அபுதாபியில் 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் கடந்த 22ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது.
    முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது. 2ஆவது ஆட்டத்திலும் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
    புதன்கிழமை 3ஆவது ஒரு நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தாடங்கியது.
    டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸி. அணி.
    கேப்டன் ஆரோன் பின்ச் 90 ரன்களும், மாக்ஸ்வெல் 47 ரன்களும் குவித்தனர். இவ்வாறாக 6 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்கள் முடிவில் 266 ரன்கள் குவித்தது.
    இதையடுத்து, பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai