Enable Javscript for better performance
பஞ்சாப் அணியை வீழ்த்தியதுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்- Dinamani

சுடச்சுட

    
    ipl1

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.
    இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
    மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களம் இறங்கினர்.
    2.4ஆவது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கிறிஸ் லின்.
    பின்னர் ராபின் உத்தப்பா களம் இறங்கினார். 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அதிரடி காட்டிய சுனில் நரேன் 3.3ஆவது ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார். பின்னர், உத்தப்பாவுக்கு தோள் கொடுத்தார் நிதின் ராணா. இருவரும் பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். நிதின் ராணா சிக்ஸர்களாக பறக்க விட்டார். 13.1ஆவது ஓவரில் பவுண்டரி எல்லைக்கு பந்தை விரட்டி அரை சதம் பதிவு செய்தார் நிதின். ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் நிதின் ராணா அரை சதம் பதிவு செய்திருந்தார். 63 ரன்கள் எடுத்திருந்தபோது வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் நிதிஷ் (34 பந்துகளில் 63 ரன்கள்). உத்தப்பா ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 24ஆவது அரை சதத்தைப் பதிவு செய்தார்.
    அவருக்கு தோள் கொடுத்த ஆன்ட்ரே ரசல் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். கடைசி ஓவரில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக் களம் இறங்கி ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். உத்தப்பாவும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.
    வெற்றி இலக்கை விரட்ட களம் இறங்கிய பஞ்சாப் போராடி தோல்வியுற்றது. கிறிஸ் கெயில் 20 ரன்கள், மயங்க் அகர்வால் 58 ரன்கள், லோகேஷ் ராகுல் 1 ரன், சர்ஃபராஸ் கான் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் 59 ரன்கள், மன்தீப் சிங் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
    ரஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai