Enable Javscript for better performance
பேட்டிங், பந்துவீச்சில் அனுபவத்தை பயன்படுத்தி விளையாடுகிறோம்: தோனி- Dinamani

சுடச்சுட

    

    பேட்டிங், பந்துவீச்சில் அனுபவத்தை பயன்படுத்தி விளையாடுகிறோம்: தோனி

    By DIN  |   Published on : 28th March 2019 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Dhoni


    பீல்டிங்கில் போதிய அளவில் செயல்படவில்லை என்றாலும், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எங்களது அனுபவத்தை பயன்படுத்துகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.
    ஐபிஎல் திருவிழா கடந்த 23ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொண்ட சென்னை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.
    பின்னர் தோனி கூறியதாவது:
    சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை பீல்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்ல முடியாது. ஆனால், பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அணியின் வீரர்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி விளையாடுகின்றனர்.
    11 வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அதிக அழுத்தம் கொடுத்தால் அவர்களுக்கு ஆட்டத்தின் போது காயம் ஏற்படும். தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை வந்து வெற்றி பெற்றாலும், இதை சிறந்த வெற்றியாகவே கருதுகிறேன்.
    தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை சிறப்பாக ஆட்டமிழக்க செய்த அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள். சிறப்பாக பந்து வீசியதால் 20 ஓவர்களில் 147 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
    பந்துவீச்சாளர் நிகிடி அணியில் இல்லாமல்போனது வருத்தமளிக்கிறது. அவர் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார் என்றார் தோனி. 
    தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில், தில்லி மைதானத்தில் புதிய வீரர்கள் விளையாடுவது சவாலாக இருந்தது. 
    எங்கள் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் விளையாடுவதற்கும் சிரமமாகவே இருந்தது. பேட்டிங்கை குறை கூற மாட்டேன். இன்னும் அதிக ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இது தொடக்கம் தான். கடைசி ஓவர் வரை சிஎஸ்கே அணியை கொண்டுவந்ததை  பெரிதாக கருதுகிறேன் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai