நியூஸிலாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் பிரணாய்; வெளியேறினார் சாய்னா

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜியியிடம் 1621, 2321, 421 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் இந்திய வீராங்கனை சாய்னா நெவால்.
நியூஸிலாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் பிரணாய்; வெளியேறினார் சாய்னா


நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜியியிடம் 1621, 2321, 421 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் இந்திய வீராங்கனை சாய்னா நெவால்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் புதன்கிழமை நடைபெற்ற முதல்சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 212ஆவது இடத்தில் உள்ள 19 வயது வாங் ஜியியை எதிர்கொண்டார் 29 வயதான சாய்னா.
முதல் செட் ஆட்டத்தில் போராடி 1621 என்ற கணக்கில் இழந்தார். அடுத்து செட் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. அந்த செட் ஆட்டத்தில் சளைக்காமல் கடுமையாகப் போராடி 2321 என்ற கணக்கில் கைப்பற்றினார் சாய்னா. எனினும், வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி செட்டை 421 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் வாங் ஜியி. இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் 1521, 2118, 2110 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.
2ஆவது சுற்றில் பிரணாய்: புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர்கள் ஹெச்.எஸ்.பிரணாய், பி.எஸ்.பிரணீத் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
சிங்கப்பூர் வீரர் கின் யூ லோவை 2115, 2114 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பிரணாய்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரணீத் சக வீரர் சுபாங்கர் டேவை 2117, 19-21,  21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.எஸ். ரெட்டி இணை 217, 2110 என்ற செட் கணக்கில், நியூஸிலாந்தின் ஜே.ஜியாங் இணையை வீழ்த்தியது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன இணையான லியூ எக்ஸ் இணையிடம் 2114, 2123, 2114 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com