உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து அனில் கும்ப்ளே வெளிப்படுத்தும் இரு கவலைகள்!

இந்திய அணியின் 4-ம் நிலை வீரராக தோனி களமிறங்கவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்...
உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து அனில் கும்ப்ளே வெளிப்படுத்தும் இரு கவலைகள்!

இந்திய அணியின் 4-ம் நிலை வீரராக தோனி களமிறங்கவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலகக் கோப்பை அணியில் இடம்பெறாததால் சில வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். ரிஷப் பந்த், அம்பட்டி ராயுடு போன்றோர். ஆனால் 15 பேரை மட்டும் தானே தேர்வு செய்யமுடியும்? இந்த அணியைக் கொண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. நான்காம் நிலை வீரர் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. என்னுடைய 4-ம் நிலை வீரர் தோனி தான். ஒரு பேட்ஸ்மேன் குறித்து விவாதம் நடக்கிறது. அவர் கேஎல் ராகுலா, விஜய் சங்கரா, தினேஷ் கார்த்திக்கா என. இந்தச் சிக்கலுக்கு உலகக் கோப்பைக்கு முந்தைய சில தொடர்களுக்கு முன்பு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், உலகக் கோப்பையில் இந்தச் சிக்கலைச் சரிசெய்வதைத் தவிர்த்திருக்கலாம். இதுதான் என் கவலை. அதேபோல இன்னொரு கவலை என்னவென்றால், வேகப்பந்துவீச்சாளர்களிடையே மாற்று வீரர் கிடையாது. ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரையே அதிகம் சார்ந்திருக்க வேண்டும். பாண்டியா, ஐபிஎல்-லில் நன்குப் பந்துவீசியதுபோல ஒருநாள் ஆட்டத்திலும் பந்துவீச்சைத் திறமையை வெளிப்படுத்துவாரா என இனிமேல் தான் பார்க்கவேண்டும். கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com