சுடச்சுட

  

  பேப்பரில் மட்டும்தான் பெரிய டீம்: ஆர்.சி.பியை கலாய்த்த விஜய் மல்லையா 

  By DIN  |   Published on : 07th May 2019 08:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mallaya

   

  சென்னை: பேப்பரில் மட்டும்தான் பெரிய டீம் என்று ஆர்.சி.பி அணியை அதன் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான விஜய் மல்லையா கிண்டல் செய்துள்ளார்.

  தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் முதல் ஆறு லீக் போட்டிகளில் தோலிவியடைந்த பெங்களூரு அணி, பின்னர் கடைசி சில லீக் போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இருந்த போதிலும் புள்ளி பட்டியலில் 11 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பெற்று 'பிளே ஆப் ' சுற்றுக்குத் தகுதி  பெறாமல் வெளியேறியது.

  ஆனால் அந்த அணியில்  விராட் கோலி . ஏ.பி.டி வில்லியர்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீர்ரகள் இடம் பெற்றிருந்தும், அதனால் பெரிய முன்னேற்றம் காண இயலவில்லை.

  இந்நிலையில் பேப்பரில் மட்டும்தான் பெரிய டீம் என்று ஆர்.சி.பி அணியை அதன் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான விஜய் மல்லையா கிண்டல் செய்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

  எப்போதுமே மிக பெரிய அணியாக இருக்கிறது; ஆனால் பேப்பரில் மட்டும்தான் என்பது சோகம். கடைசி இடம் பெற்றிருப்பது பெரும் சோகத்திற்கு உள்ளாக்குகிறது.

  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai