சுடச்சுட

    
    csk

    வெற்றிக்கு வித்திட்ட வாட்ஸன்- டூபிளெஸ்ஸிஸ்.

    தில்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 8-ஆவது முறையாக தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் சென்னை.
    அதன் வீரர்கள் டூபிளெஸ்ஸிஸ்-வாட்ஸன் அபாரமாக ஆடி அரைசதங்களை விளாசினர்.
    ஐபிஎல் 2019 ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ்-தில்லி கேபிடல்ஸ் அணிகள் இடையிலான குவாலிபையர் 2 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
    குவாலிபையர் 1 ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியுற்றது சென்னை. அதே நேரத்தில் எலிமினேட்டர் ஆட்டத்தில் ஹைதரபாதை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தியது தில்லி.
    குவாலிபையர் 2 ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது.
    சென்னை அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷர்துல் தாகுர் சேர்க்கப்பட்டிருந்தார்.
    முன்னணி வீரர்கள் ஏமாற்றம்
    இதையடுத்து தில்லி அணி தரப்பில் பிரித்வி ஷா-ஷிகர் தவன் களமிறங்கினர். இதில் 5 ரன்கள் எடுத்த பிரித்வியை எல்பிடபிள்யு முறையில் அவுட் செய்தார் தீபக் சஹார். அவருக்கு பின் ஷிகர் தவன் 18, காலின் மன்றோ 27 ரன்களுக்கு வெளியேறினர். 
    விக்கெட்டுகள் சரிவு
    பின்னர் கேப்டன் ஷிரேயஸ் ஐயர்-ரிஷப் பந்த் இணை சேர்ந்து ஸ்கோரை உயர்த்த முயன்றனர். எனினும் 13 ரன்கள் எடுத்திருந்த ஷிரேயஸ் ஐயரை அவுட்டாக்கி வெளியேற்றினார் தாஹிர். 3 ரன்களுடன் அக்ஸர் பட்டேல் வெளியேறினார். 13-ஆவது ஓவரின் 5 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எடுத்திருந்தது தில்லி. அவரைத் தொடர்ந்து ரூதர்போர்ட் 10, கீமோ பால் 3 ரன்களுக்கு வெளியேறினர்.
    ரிஷப் பந்த் 38
    ஒருமுனையில் பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தி வந்த ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 ரன்களை விளாசி அவுட்டானார்.
    20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை சேர்த்தது தில்லி.
    இஷாந்த் சர்மா கடைசி ஓவரில் தலா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் 10 ரன்களை விளாசினார். 
    சென்னை தரப்பில் தீபக் சஹார் 2-28, ஹர்பஜன் சிங் 2-31, ரவீந்திர ஜடேஜா 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    சென்னை வெற்றி
    148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை தரப்பில் களமிறங்கிய வாட்ஸனும், டூபிளெஸ்ஸிஸும் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
    வாட்ஸன்-டூபிளெஸ்ஸிஸ் அரைசதம்
    1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 50 ரன்களுடன் டூபிளெஸ்ஸிஸும், 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களுடன் வாட்ஸனும் அவுட்டாகி திரும்பினர். டூபிளெஸ்ஸிஸ் தனது 12-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.
    அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 11 ரன்களுக்கும், கேப்டன் தோனி 9 ரன்களுடனும் வெளியேறினர். அம்பதி ராயுடு 3 பவுண்டரியுடன் 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். பிராவோ வெற்றிக்கான பவுண்டரியை விளாசினார்.
    19 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து வென்றது சென்னை. தில்லி தரப்பில் பெளல்ட், இஷாந்த் சர்மா, அக்ஸர் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    12-இல் இறுதி ஆட்டம்: மும்பை-சென்னை மோதல்
    இந்த வெற்றி மூலம் 8-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள சென்னை, வரும் 12-ஆம் தேதி ஹைதராபாதில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் மோதுகிறது. இரு அணிகளும் நான்காவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளன.


    வெற்றிக்குப் பின் மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடும் தோனி, ரெய்னா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai