செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

சீனாவின் லுவானில் நடைபெற்று வரும் ஐடிஎப் மகளிர் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் அங்கிதா ரெய்னா தகுதி பெற்றுள்ளார். 2 மணி நேரம் நடைபெற்ற காலிறுதியில் ஹாங்காங்கின் வோங் சாங்கை 2-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 


இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மின்னொளி ஆட்டங்களில் போதிய பயிற்சி வழங்க வேண்டும் என நட்சத்திர வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். 


உலகக் கோப்பையை ஒட்டி, நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. முதலில் ஆடிய நியூஸி. 50 ஓவர்களில் 286/9 குவித்தது. பினனர் ஆடிய ஆஸி. அணி ஸ்மித் 91, மேக்ஸ்வெல் 70 ஆகியோரின் அபார ஆட்டத்தால் வெற்றிபெற்றது.


இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய இந்திய துணைக் கண்டத்தில் நடைபெறவுள்ள அனைத்து வில்வித்தை போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப சோனி பிக்சர்ஸ் நிறுவனம் உரிமத்தை பெற்றுள்ளது. 


சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய எஸ்விஎஸ் கிளப் ஓபன் ஸ்னூக்கர் போட்டியில் முன்னணி வீரர்கள் யோகேஷ் குமார், அனுஜ் உப்பல், ரபாத் ஹபிப், கிரீஷ், பைஸல் கான், அரவிந்த் குமார் உள்பட 128 பங்கேற்கின்றனர். வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.60 ஆயிரமும், 2-ஆவது இடம் பெறுவோருக்கு ரூ.30 ஆயிரமும் பரிசாக தரப்படுகிறது.


ரசிகரை தரக்குறைவாக நடத்தியதற்காக பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு 3 ஆட்டங்களில் ஆட பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com