சுடச்சுட

  

  சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு: சியேட் விருதுகள் அறிவிப்பு

  By Raghavendran  |   Published on : 14th May 2019 03:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kohli,_mandana

   

  சியேட் கிரிக்கெட் விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் வழங்கினார். 

  சேத்தேஷ்வர் புஜாராவுக்கு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதும், ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தானா சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார். 

  இந்நிலையில், சிறந்த வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆகிய இரு விருதுகள் விராட் கோலிக்கு வழங்கப்பட்டன. 

  சிறந்த பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். டி20 வீரருக்கான விருது ஆரோன் ஃபிஞ்ச்-க்கு வழங்கப்பட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக குல்தீப் யாதவ் மற்றும் டி20 பந்துவீச்சாளராக ரஷீத் கான் ஆகியோர் விருது பெற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai