ஐசிசி ஆட்ட நடுவர் பட்டியலில் ஜிஎஸ்.லட்சுமி
By DIN | Published On : 15th May 2019 01:01 AM | Last Updated : 15th May 2019 01:01 AM | அ+அ அ- |

ஐசிசி சர்வதேச ஆட்ட நடுவர் பட்டியலில் இடம் பெற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமையை இந்தியாவின் ஜிஎஸ்.லட்சுமி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச ஆட்டங்களில் நடுவராக செயல்பட வாய்ப்பு கிட்டியுள்ளது.
ஏற்கெனவே கிளேயர் போலோசக் ஆடவர் ஒருநாள் ஆட்டத்தில் நடுவராக பணிபுரிந்த சிறப்பைப் பெற்றார்.
51 வயதான ஜிஎஸ். லட்சுமி 2008-09-இல் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் சீசனிலும், 3 மகளிர் ஒருநாள் சர்வதேச ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்களில் பணிபுரிந்தவர்.
இந்நிலையில் தற்போது ஐசிசி ஆட்ட நடுவர் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக லட்சுமி கூறுகையில்: இது மிகப்பெரிய கெளரவமாகும். கிரிக்கெட் வீராங்கனையாக நீண்ட நாள் ஆடினேன். ஆட்ட நடுவராகவும் பணிபுரிந்தேன். இதன் மூலம் பெற்ற அனுபவத்தை சர்வதேச விளையாட்டில் பயன்படுத்துவேன் என்றார்.
ஆஸ்திரேலியாவின் எலோய்ஸ் ஷெரிடானும் நடுவர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இருவரது நியமனங்களையும் ஐசிசி முதுநிலை மேலாளர் அட்ரியன் கிரிப்பித் வரவேற்றுள்ளார்.