Enable Javscript for better performance
மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு தேவை: கம்பீர்- Dinamani

சுடச்சுட

    

    மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு தேவை: கம்பீர்

    By DIN  |   Published on : 16th May 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gambir


    உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில்,  மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்தார். 
    அவர் மேலும் கூறியதாவது: பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு மேலும் பக்கபலமாக இன்னெரு வேகப்பந்து வீச்சாளரும் தேவை என்று கருதுகிறேன். ஹார்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் பந்துவீசுவார்கள் என்றாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகள் இந்தியாவுடன் மோதும் ஆட்டங்களை காண்பேன் என்றார் கம்பீர்.
    இவர், பாஜக சார்பில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai