Enable Javscript for better performance
ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தியது ஆஸி.- Dinamani

சுடச்சுட

    
    hockey

    ஆடத்தில் பரபரப்பாக விளையாடிய இந்திய-ஆஸி. அணி வீரர்கள்.


    ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
    முதல் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு 15ஆவது நிமிடத்தில் முதல் கோலையும், 20ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் பதிவு செய்தனர்.
    முதல் கோலை ஆஸி. வீரர் கோவர்ஸ் பிரமாதமாக வலைக்குள் உதைத்து தள்ளினார். இரண்டாவது கோலை ஹேவார்டு பதிவு செய்தார். ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும், ஹர்மன்பிரீத் சிங்கின் கோல் முயற்சியை ஆஸி. வீரர் இடைமறித்தார்.
    இரண்டாவது பாதி ஆட்டத்தில் 59 மற்றும் 60ஆவது நிமிடத்தில் ஆஸி. அணி தொடர்ச்சியாக  2 கோல்களைப் பதிவு செய்தது.
    இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai