இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக குரேஷிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் இகோர் ஸ்டிமாக் (51) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்


இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக குரேஷிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் இகோர் ஸ்டிமாக் (51) நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன் கடந்த ஜனவரியில் இந்திய கால்பந்து பயிற்சியாளர் பணியை ராஜிநாமா செய்ததை அடுத்தது, அந்த இடம் காலியாக இருந்தது.
இந்நிலையில், 51 வயது இகோர் ஸ்டிமாக் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குரோஷிய அணியில் 1998ஆம் ஆண்டில் உலகக் கோப்பை போட்டியில் வீரராக முக்கியப் பங்கு வகித்துள்ளார். பயிற்சியாளராக 18 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
2014 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரேஷிய அணியை தகுதி பெற வைத்தது பயிற்சியாளராக இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், இந்திய வீரர்களுக்கு சரியான பயிற்சியாளராக இகோர் இருப்பார். அவரை வரவேற்கிறோம். அவரது அனுபவம் இந்திய கால்பந்து அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் என்றும் நம்புகிறேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com