பாக். அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாக். அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் ஆட்டம்: இங்கிலாந்து வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது இங்கிலாந்து.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம்-உல்-ஹக், அதிகபட்சமாக 131 பந்துகளில் 151 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை சுருட்டினார் கிறிஸ் வோக்ஸ்.
இரண்டாவதாக 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது இங்கிலாந்து.
தொடக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கிய ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டவ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிகபட்சமாக 93 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.
ஜோ ரூட் 43 ரன்களும், மொயீன் அலி 46 ரன்களும் எடுத்தனர். 44.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4ஆவது ஒரு நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட பேர்ஸ்டவ் கூறுகையில், ஐபிஎல் தொடரில் விளையாடியதன் மூலம் எனது ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்திக் கொண்டேன் என்றார்.
இயான் மோர்கனுடன் தடை: இதனிடையே, இந்த ஆட்டத்தை விரைந்து முடிக்காமல் பந்துவீச்சின் போது காலதாமதம் ஏற்படுத்தியதாகக் கூறி, இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு 4ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
அத்துடன், ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. 
இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்களுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
கடந்த 12 மாதங்களில் இதுபோன்று ஆட்டத்தை உரிய நேரத்தில் முடிக்காமல் இயான் மோர்கன் இரண்டாவது முறையாக கால தாமதம் ஏற்படுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com