சுடச்சுட

    
    basket-ball

    தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய ராஜஸ்தான் - பஞ்சாப் வீராங்கனைகள். 


    கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான 16 வயதுக்கு உள்பட்டோருக்கான 36-ஆவது தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டங்களில் ஆந்திரம், ஹரியாணா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
     லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 3-ஆவது நாள் ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், ஹரியாணா - சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் ஹரியாணா அணி 66 - 40 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கரை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா அணி 59 - 52 என்ற புள்ளிகள் கணக்கில் புதுவையை வீழ்த்தியது. 3-ஆவது ஆட்டத்தில் கர்நாடக அணி 65 - 49 என்ற புள்ளிகள் கணக்கில் தில்லியை வீழ்த்தியது. 4-ஆவது ஆட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் அணி 58 - 49 என்ற புள்ளிகள் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.
     5-ஆவது ஆட்டத்தில் ஆந்திர மாநில அணி 84 - 71 என்ற புள்ளிகள் கணக்கில் உத்தரகண்ட் அணியை வீழ்த்தியது. 6-ஆவது ஆட்டத்தில் கேரள அணி 77 - 55 என்ற புள்ளிகள் கணக்கில் மத்தியப் பிரதேசத்தை வீழ்த்தியது. 7-ஆவது ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 55 - 48 என்ற புள்ளிகள் கணக்கில் மேற்கு வங்கத்தையும், 8-ஆவது ஆட்டத்தில் பிகார் அணி 83 - 67 என்ற புள்ளிகள் கணக்கில் அஸ்ஸாம் அணியையும் வீழ்த்தின.
     அதேபோல் மகளிர் பிரிவு முதல் ஆட்டத்தில் மேற்கு வங்க அணி 60 - 54 என்ற புள்ளிகள் கணக்கில் பிகார் அணியை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் அஸ்ஸாம் அணி 46 - 37 என்ற புள்ளிகள் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது. 3-ஆவது ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 67 - 63 என்ற புள்ளிகள் கணக்கில் கர்நாடகத்தை போராடி வீழ்த்தியது.  4-ஆவது ஆட்டத்தில் ஆந்திர அணி 51 - 18 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸாவை எளிதில் வீழ்த்தியது.
      5-ஆவது போட்டியில் உத்தரப் பிரதேச அணி 48 - 30 என்ற புள்ளிகள் கணக்கில் மத்தியப் பிரதேசத்தை வீழ்த்தியது. 6-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா அணி 61- 44 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. 7-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 67 - 60 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தியது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai